ஹைதராபாத்: டோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை இலியானாவின் முதல் இந்தி படமான பர்ஃபியில் அவரது நடிப்பை பார்த்துவிட்டு அமிதாப் உள்பட பலரும் பாராட்டியுள்ளனர்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கம் இலியானா அவ்வப்போது தமிழ் படங்களிலும் தலையைக் காட்டிவி்ட்டு செல்கிறார். இந்நிலையில் அவரின் கவனம் பாலிவுட்டுக்கு சென்றது. சல்மான் கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை தட்டிக்கழித்த அவர் இறுதியாக ரன்பிர் கபூர், பிரியங்கா சோப்ராவுடன் சேர்ந்து பர்ஃபி படத்தில் நடித்தார். அண்மையில் ரிலீஸான அந்த படத்தில் இலியானாவின் நடிப்பு பேசப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சன், பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் உள்பட பல பிரபலங்கள் இலியானாவை பாராட்டியுள்ளனர்.
அமிதாப் பச்சன் டுவீட்:
முதல் இந்தி படத்திலேயே இலியானா டி க்ரூஸின் நடிப்பு அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
கரண் ஜோஹாரின் டுவீட்:
வெல் டன் இலியானா, சூப்பரான முதல் படம்
இவர்கள் தவிர நடிகைகள் லாரா தத்தா, தியா மிர்சா, சோஃபி சவுத்ரி உள்ளிட்ட பலரும் இலியைப் பாராட்டியுள்ளனர். பாலிவுட்டில் வெற்றி பெற்றதும் அங்கேயே செட்டிலாகிவிட்ட தென்னிந்திய நடிகை அசின் மாதிரி இவரும் சென்றுவிடக் கூடாது என்று பலரும் விரும்புகின்றனர்.
Post a Comment