சென்னை: சிங்கம் 2 படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க விருப்பமில்லை என்று ஹன்சிகா புலம்பி வருகிறாராம்.
சிங்கம் 2 தமிழ் மற்றும் இந்தியில் வெற்றி பெற்றதையடுத்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தில் அனுஷ்கா மட்டுமே ஹீரோயின். ஆனால் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவுடன், ஹன்சிகாவும் இருக்கிறார். அனுஷ்கா தான் முதல் ஹீரோயின், ஹன்சிகா இரண்டாவது நாயகி தான்.
ஹன்சிகா இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு தற்போது ஏன் ஒப்புக் கொண்டோம் என்று நினைத்து வருத்தப்படுகிறாராம். சிம்புவுடன் 2 படங்கள், ஆர்யாவுடன் ஒரு படம் என்று பிசியாக இருக்கும் அவருக்கு இரண்டாவது நாயகியாக நடிக்க விருப்பமில்லையாம். இதனால் இப்படி என்னை போய் இரண்டாவது நாயகியாக நடிக்க வைக்கிறார்களே என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தள்ளுகிறாராம்.
அனுஷ்கா கால்ஷீட் பெறவே இயக்குனர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர் விக்ரமுடன் தாண்டவம் படத்தை முடித்துவிட்டு, ஆர்யாவுடன் இரண்டாம் உலகம், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் என்று கேப் விடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏம்ப்பா ஹன்சிகா புலம்புவதற்கு நீங்க என்ன சொல்றீங்க?
Post a Comment