தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்த காஞ்சிபுரம் தியேட்டர் உரிமையாளர்கள்!

|

Producers Deep Shock Over Kanchipuram   

சென்னை: இனி புதிய படங்களுக்கு மினிமம் கேரண்டி எனும் முறையில் பெரும் தொகையை செலுத்த மாட்டோம் என காஞ்சிபுரம் நகர திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதனால் முகமூடி படத்தை இரண்டு நாட்கள் கழித்துதான் காஞ்சிபுரத்தில் படத்தைத் திரையிட்டனர்.

இது தயாரிப்பாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பொதுவாக பெரிய படங்களை வாங்கும்போது, அதை மினிமம் கேரண்டி முறையில் வெளியிடுவது வழக்கம். ரஜினி படங்களுக்கு ரூ 1 கோடி வரை இப்படித் தரப்படும். கமல், விஜய், அஜீத் போன்றவர்களின் படங்களுக்கும் குறித்த தொகை இப்படித் தரப்படும்.

ஆனால் சமீப காலமாக இப்படித் தரப்பட்ட தொகையை வசூலிக்க முடியாமல் காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்குகள் திணறிக் கொண்டிருக்கின்றன. ஏழாம் அறிவு, பில்லா 2, சகுனி, வேலாயுதம், நண்பன் போன்ற படங்களுக்கு பெரும் தொகை தரப்பட்டதாம். ஆனால் அந்தப் படங்கள் மினிமம் கேரண்டி தொகையை வசூலிக்க முடியாமல் தியேட்டர் உரிமையாளர்களை ஏமாற்றிவிட்டன.

இதனால் இப்போது காஞ்சிபுரம் தியேட்டர்காரர்கள் அனைவரும் à®'ன்றிணைந்து à®'ரு புதிய முடிவை எடுத்துள்ளனர். இனி எக்காரணம் கொண்டும் எந்தப் படத்துக்கும் மினிமம் கியாரண்டி தொகை தரமுடியாது என்றும், சாதாரணமாக à®'ரு தொகையை அட்வான்ஸாக பெற்றுக் கொண்டு படங்களைத் தர வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளனர்.

இந்த நிபந்தனைக்கு ஆரம்பத்தில் à®'ப்புக் கொள்ளாததால், முகமூடி படத்தைத் திரையிட காஞ்சிபுரம் திரையரங்குகள் மறுத்துவிட்டன. வேறு வழியின்றி ரூ 5 லட்சம் மட்டும் பெற்றுக் கொண்டு அந்தப் படத்தை தயாரிப்பாளர் கொடுத்ததால், ஞாயிற்றுக் கிழமை திரையிட்டுள்ளனர்.

தியேட்டர்காரர்களின் இந்த à®'ற்றுமை தயாரிப்பாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

Post a Comment