'ஓ மை காட்'... ரஜினி?

|

Will Rajini Star Omg Tamil Remake

மும்பை: இந்தியில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள ஓ மை காட் படம் தமிழில் ரீமேக் செய்யத் தயாராகி வருகிறதாம். ஆனால் இதில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என்று அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் அக்ஷய் குமார் நிபந்தனை விதித்துள்ளதால் தற்போது பந்து ரஜினியின் கோர்ட்டுக்கு வந்து பதிலுக்காக காத்திருக்கிறது.

தமிழில் ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தின் கதையைப் போன்றதுதான் இந்த ஓ மை காட் படத்தின் கதையும். அதாவது கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன் குறித்த கதை இது.

இருப்பினும் இதில் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கிறது. அதாவது பாபா படத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நம்பிக்கைக்கு மாறுகிறான். அதேசமயம், ஓ மை காட் படத்தின் ஹீரோ கடவுள் மீதான அதீத நம்பிக்கையிலிருந்து தனக்கு ஏற்பட்ட பாதிப்பால் கடவுளையே அழிக்கக் கிளம்புகிறான் என்பதுதான் அந்த வித்தியாசம்.

இருப்பினும் கடவுளுக்கு எதிரான செயலில் ஹீரோ ஈடுபடுவதாக ஓ மை காட் படத்தின் கதைக் கரு அமைந்துள்ளதால் இதில் ரஜினி நடிக்க முன்வருவாரா என்பது சந்தேகம் என்கிறார்கள்.

ஆனால் ரஜினி நடித்தால் மட்டுமே இப்படம் தமிழில் பிரமாதமாக போகும் என்பதில் அக்ஷய் குமார் நம்பிக்கையுடன் உள்ளாராம்.

கடவுள் நம்பிக்கையை விடுங்க, ஓ மை காட் படத்தில் பிரபுதேவாவும், சோனாக்ஷி சின்ஹாவும் போட்ட செமத்தியான குத்தாட்டம் இருக்கிறதே, அது தமிழிலும் வருமா என்பதை முதலில் சொல்லுங்க குமார்....!

 

Post a Comment