இன்றைக்கு ஊடகங்களில் அதிக அளவில் பேசப்படும் பிரபல ஜோடிகள் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி. சன் டிவியில் தொடங்கி விஜய் டிவி, கலைஞர் டிவி, உள்ளிட்ட பிரபல சேனல்களில் இவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இவர்களுக்காக ஸ்பெசல் பக்கங்களை ஒதுக்கி சிறப்பு பேட்டிகளை வெளியிடுகின்றன வார இதழ்கள்.
சன் டிவியில் ஸ்டார் கவுண்டனில் ஜி.வி. பிரகாஷ் பேட்டி என்றால் அதில் பிரகாஷ் பற்றிய இனிய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் சைந்தவி. சில தினங்களுக்கு முன் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியரில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி ஜோடி பங்கேற்றனர். செல்லக்குழந்தைகளின் அழகான குரல்களுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளை சொல்லிய இந்த ஜோடி சிறப்பாக பாடல்களையும் பாடி அசத்தினர்.
ரேடியோ மிர்ச்சி விருது வழங்கும் விழாவில் இந்த ஜோடி பங்கேற்றதுதான் விஜய் டிவியில் ஹைலைட் ஆக காண்பிக்கப்பட்டது. பரிசு வாங்கவோ, பாடல் பாடவோ, ஜி.வி. பிரகாஷ் மேடையேறும் போதெல்லாம் கேமராவின் கண்கள் சைந்தவியை காட்டியது.
சில மாதங்களுக்கு முன்பு வரை சிநேகா - பிரசன்னா ஜோடி ஊடகங்களின் கண்களில் சிறப்பு கவனம் பெற்றது. அதேபோல் இப்போது ஜி.வி.பிரகாஷ் - சைந்தவியை சுற்றி வருகின்றன ஊடகங்களின் கேமராக்கள்.
Post a Comment