என்றென்றும் புன்னகை படப்பிடிப்புத் தளத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் நடிகர் வினய்.
உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், சமீபத்தில் வந்த மிரட்டல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வினய், அடுத்து நடிக்கும் படம் என்றென்றும் புன்னகை. இந்தப் படத்தில் ஜீவா - த்ரிஷா ஜோடி. இன்னொரு நாயகனாகத்தான் வினய் நடிக்கிறார்.
இந்தப் படத்தை டாக்டர் வி ராமதாஸ் மற்றும் ஜிகேஎம் தமிழ்க் குமரன் தயாரிக்கின்றனர். தமிழன் படத்தை இயக்கிய அகமது இந்தப் படத்தை டைரக்டு செய்கிறார்.
இன்று வினய்யின் பிறந்த நாள் என்பதால், பெரிய கேக் வரவழைத்து செட்டிலேயே கொண்டாடினர்.
ஜீவா, த்ரிஷா, தயாரிப்பாளர்கள், இயக்குநர் உள்ளிட்டோர் வினய்க்கு கேக் ஊட்டி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.