இரண்டாவது கதாநாயகியாக நடித்தாலும் என் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பதிந்து விடுகிறது அதனால் இரண்டாவது கதாநாயகி வேடம் பற்றி நான் கவலைப்படவில்லை என்று நடிகை பியா கூறியுள்ளார்.
கோவா, கோ உள்ளிட்ட பல படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் பியா. தொடர்ந்து இரண்டாவது கதாநாயகியாகவே நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கிறதாம். இது குறித்து கருத்து கூறிய பியா," சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும், நல்ல வேடங்களாக இருந்தால் நடிக்க சம்மதிக்கிறேன். கோ மற்றும் மாஸ்டர் போன்ற படங்களில் இரண்டாவது கதாநாயகியாக தான் நடித்திருந்தேன். ஆனால் அந்த வேடங்கள் ரசிகர்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தியது எனவே இரண்டாவது கதாநாயகியாக நடிப்பது பற்றி வருத்தப்படவில்லை என்றார். கவர்ச்சி நடிகை என்ற முத்திரையை மாற்றும் வகையில் யாராவது கவர்ச்சி இல்லாத வேடங்கள் கொடுத்தால் உடனே நடிக்கத் தயார் என்றும் பியா கூறினார்.
பியா தற்போது சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். பியாவுடன் பிந்து மாதவி, ரீமா சென் போன்றோரும் இந்தப் படத்தில் இருக்கின்றனர். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தி படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.
Post a Comment