சாட்டை மாதிரி படத்தை நாங்க மட்டும்தான் எடுக்க முடியும் – பிரபு சாலமன்

|

Only Directors Can Produce Movies Like Saattai

சின்ன படம்தான்.. வெளிநாட்டு லொகேஷன்களோ, ஆடம்பர செட்களோ எதுவும் இல்லை. முக்கியமாக வனிக ரீதியில் ஒரு காட்சி கூட இல்லை. ஆனாலும் இடைவேளை விடும்போது, ‘எதுக்குங்க.. அப்படியே கன்டினியூ பண்ணுங்க' என்று பார்வையாளர்கள் பலர் ஆர்வத்துடன் கேட்டது, புது இயக்குநர் அன்பழகனின் ஸ்க்ரிடுக்குக் கிடைத்த வெற்றி.

படமும் பரவலாக பேசப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் இந்தப் படத்துக்கு கவுரவமான எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வந்திருப்பதும், மவுத் டாக் நன்றாக இருப்பதும் தயாரிப்பாளராக இயக்குநர் பிரபு சாலமனை சந்தோஷப்பட வைத்துள்ளது.

எப்படி இந்த ஸ்கிரிப்டை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டபோது, "அன்பழகன் என் உதவி இயக்குநர்தான். மைனா சமயத்திலேயே இந்த ஸ்கிரிப்டை சொன்னார். நிச்சயம் பண்ணலாம் என்று சொன்னேன். இந்தக் கதையை எழுதும்போதே, தயாளன் என்ற பாத்திரத்துக்கு சமுத்திரக்கனியை மனதில் வைத்துதான் எழுதியதாகச் சொன்னார்.

சமுத்திரக்கனியிடம் விஷயத்தைச் சொன்னதும்.. ‘இது நாம சேர்ந்து பண்ண வேண்டிய படம். இந்த மாதிரி ஒரு படத்தை நம்ம மாதிரி இயக்குநர்கள்தான் சேர்ந்து பண்ண முடியும்' என்றார்.

அவர் சொன்னது உண்மைதான். எங்களை மாதிரி இயக்குநர்கள் மனது வைத்தால் சாட்டை மாதிரி நிறை படங்கள் நிறைய வரும்," என்றார்.
வரணும் வரணும்... தமிழ் சினிமாவுக்கு அது நல்ல அந்தஸ்தைப் பெற்றுத் தரணும்!

 

Post a Comment