கோஹ்லியுடன் கிசுகிசுக்கப்படும் தமன்னா!

|

What Is Going On Between Tamanna Ko
சென்னை: விராட் கோஹ்லியுடன் விளம்பரப் படத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளதைத் தொடர்ந்து, இருவரைப் பற்றியும் கிசுகிசு பரவ ஆரம்பித்துள்ளது.

செல்போன் நிறுவனம் ஒன்றின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் கோஹ்லி. இதே விளம்பர நிறுவனத்தின் ஆந்திரப் பிரதேச தூதராக தமன்னா உள்ளார்.

அடுத்து இருவரையும் சேர்த்து ஒரு விளம்பரப் படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளது அந்த நிறுவனம்.

இதைத் தொடர்ந்து தமன்னாவும் கோஹ்லியும் சந்தித்துப் பேசியதாகவும், இருவரும் இப்போது நெருக்கமாகிவிட்டதாகவும் செய்தி பரவியுள்ளது.

ஏற்கெனவே பாலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் தமன்னா. இப்போது விராட் கோஹ்லியின் நட்பும், ஆதரவும் தன்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சேர்க்கும் என நம்புகிறார் அவர்.

விராட் கோஹ்லி நடிகைகளுடன் இணைத்துப் பேசப்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே அவருக்கும் தீராத விளையாட்டுப் பிள்ளை நாயகி சாரா ஜேனுக்கும் காதல் என கிசுகிசு பரவியது நினைவிருக்கலாம்.
 

Post a Comment