மும்பை: பாலிவுட் நடிகர் சைப் அலி கான் தனது காதலி கரீனா கபூரின் பிறந்தநாளைக் கொண்டாட அவரை கோவா அழைத்துச் செல்கிறார்.
பாலிவுட் நடிகர் சைப் அலி கானும், நடிகை கரீனா கபூரும் வரும் அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று சைபின் தாயார் ஷர்மிளா தாகூர் அண்மையில் தெரிவி்த்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் இதை உறுதி செய்யவி்ல்லை. இந்நிலையில் கரீனா கபூர் தனது ஹீரோயின் பட விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார்.
அந்த படம் வரும் 21ம் தேதி அதாவது கரீனாவின் 31வது பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆகிறது. எப்பொழுது பார்த்தாலும் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் கரீனாவை அவரது பிறந்தநாள் இரவு கோவாவுக்கு அழைத்துச் செல்ல சைப் திட்டமிட்டுள்ளார். அவ்வாறு சென்று வருவது கரீனாவுக்கு ரிலாக்ஸாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார்.
இது குறித்து கரீனாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில்,
கரீனா இந்த மாதம் ஹீரோயின் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். இந்த படத்திற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார். இது அவருக்கு முக்கியமான படம் என்றனர்.
பிறந்தநாள் விழா கொண்டாட்டம் எல்லாம் இருக்கட்டும், திருமணம் பற்றி எப்பொழுது அறிவிப்பார்களாம்...
Post a Comment