ரஜினி - கமல் படங்களுக்கு இன்சூரன்ஸ்!

|

12 Tamil Producers Keen On Insuring Movies

சென்னை: நாளுக்கு நாள் சினிமா தொழில் நுட்பம் வளர வளர, படங்களின் நஷ்டத்திலிருந்து பாதுகாப்பாகக் கரையேறும் உத்திகளையும் சினிமாக்காரர்கள் முன்ஜாக்கிரதையாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ரிஸ்க் அதிகமுள்ள தொழில்களில் ஒன்றான சினிமாவுக்கு இப்போது இன்சூரன்ஸ் செய்வது வாடிக்கையாகி வருகிறது.

ரஜினி, கமல் உள்பட பெரிய நடிகர்களின் படங்களுக்கு இப்போது கட்டாய இன்சூரன்ஸ் என்பதில் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நடிகர்களே கவனமாக உள்ளனர்.

இந்த காப்பீட்டால் படங்களின் ஷூட்டிங்குகளின் போது ஏற்படும் விபத்துக்களுக்கு ஓரளவு நஷ்ட ஈடு கிடைக்கிறது.

முன்பு ரஜினியின் சிவாஜி, எந்திரன் படப்பிடிப்புகளின்போது நடந்த சிறு விபத்துக்களுக்கு நஷ்ட ஈடு கிடைத்தது. அதேபோல மணிரத்னத்தின் ராவணன் பட செட் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது. அதற்காக ரூ 30 லட்சம் இழப்பீடு கிடைத்தது.

இப்போது ரஜினி நடிக்கும் 'கோச்சடையான்', கமல் நடிக்கும் 'விஸ்வரூபம்', ஆர்யாவின் 'இரண்டாம் உலகம்', மணிரத்னம் இயக்கும் 'கடல்', பாலா இயக்கும் 'பரதேசி' படங்கள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளன.

 

Post a Comment