அமிதாப்பச்சன் நடத்தும் குரோர்பதி நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி பங்கேற்று விளையாடியுள்ளார்.
ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படம் அக்டோபர் 5 ம் தேதி வெளியாக உள்ளது. அதை புரமோட் செய்யும் விதமாக குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த படம் குறித்து அமிதாப் ஏற்கனவே ஸ்ரீதேவிக்கு டிவிட்டரில் வாழ்த்து சொல்லியிருந்தார். இதனையடுத்து குரோர்பதி நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி பங்கேற்று கேள்விகளுடன் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்' படம் பற்றிய முக்கிய அம்சங்களை உரையாடுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியுடன் அவருடைய கணவர் போனிகபூர், ‘பா' பட இயக்குநர் பால்கி அவருடைய மனைவியும், இங்கிலீஸ் விங்கிலீஸ் பட இயக்குநருமான கவுரி ஆகியோர் பங்கேற்றனர்.
அமிதாப்புடன் ‘ஆக்ரி ராஸ்தா', ‘இன்குலாப்', ‘குடா கவா' ஆகிய இந்தி திரைப்படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்த ஜோடி சின்னத்திரை கேம்ஷோவில் தோன்ற உள்ளனர். இது விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment