அஜீத் படத்தில் நடிக்க பிறமொழி படங்களை கிடப்பில் போட்ட அனுஷ்கா

|

Anushka Prefers Ajith Others   

சென்னை: நடிகை அனுஷ்கா அஜீத் குமாரின் 53வது படத்தில் நடிப்பதற்காக பிறமொழி படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்கத் தயங்குகிறாராம்.

அஜீத் குமார் தற்போது விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் அஜீத்தின் 53வது படமாக அமையும். படத்தின் திரைக்கதை பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து அறிந்த அனுஷ்கா அஜீத் படத்தில் நடிப்பதற்காக தன்னைத் தேடி வரும் பிற மொழிப் பட வாய்ப்புகளை கிடப்பில் போட்டுள்ளாராம். அனுஷ்கா தற்போது ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் மற்றும் கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் விக்ரமுடன் ஜோடி சேர்ந்த தாண்டவம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.

இது தவிர அவர் சூர்யாவுடன் சிங்கம் 2 படத்திலும் நடிக்கிறார். அவர் கை நிறைய படங்கள் இருந்தாலும் வாய்ப்புகள் வந்து குவியத் தான் செய்கிறது.

 

Post a Comment