விஜய்யுடன் விரைவில் இணையப் போகிறார் அமீர். இந்த ஆண்டு முடிவில் அல்லது 2013-ல் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.
ஷங்கரின் நண்பன் படம் தொடங்குவதற்கு முன்பே, விஜய்யை இயக்கப் போவதாக சொல்லியிருந்தார் அமீர்.
ஆனால் சில காரணங்களுக்காக இந்தத் திட்டம் தாமதமானது.
பருத்திவீரன் படம் வெளியான சமயத்தில் கண்ணபிரான் என்ற படம் குறித்து அமீர் பேசி வந்தார். இதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்தப் படம் அப்போது கைவிடப்பட்டது.
இப்போது ஜெயம் ரவி - நீது சந்திரா நடிக்க ஆதிபகவனை இயக்கி வருகிறார் அமீர். இந்தப் படம் முடிந்த கையோடு, தனது முந்தைய கனவுப் படமான கண்ணபிரானை விஜய்யை வைத்து ஆரம்பிக்கப் போகிறாராம்.
பருத்தி வீரனை விட நூறு மடங்கு பவர்புல் படமாக கண்ணபிரான் இருக்கும் என்று ஏற்கெனவே அமீர் கூறியது நினைவிருக்கலாம்.
Post a Comment