தமிழ்நாட்டு விவசாயி சேத்துல கால்வச்சாதான் நாங்க சோத்துல கைவைக்க முடியும் - மம்முட்டி

|

Mammootty S Opinion On Water Disputes Tn Kerala

சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் தான் ஒரு நல்ல மனிதன் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார் நடிகர் மம்முட்டி.

சமீபத்தில் சிவகாசியில் தீவிபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ 40 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை வழங்கி, தமிழ் மக்களை தழுதழுக்க வைத்தவர் மம்முட்டி.

ஆனால் தான் செய்தது ஒரு பெரிய விஷயம் என நினைக்காமல், கஷ்டப்படுபவர்களுக்கு தன்னால் ஆன ஒரு சின்ன உதவி என்றே கூறி வருகிறார்.

இந்த நிலையில், ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில், தமிழகம் - கேரளம் இடையிலான நீர்ப் பங்கீடு குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்த கேள்விக்கு மம்முட்டி அளித்த நச்சென்ற பதில் இது:

''தமிழ்நாட்டு விவசாயி சேத்துல கால் வெச்சாத்தான், நாங்க சோத்துல கை வைக்க முடியும். இல்லைன்னா, நாங்க பசியும் பட்டினியுமாக் கிடக்க வேண்டியதுதான்.''

இந்த விஷயத்தில் மலையாள பிரபலங்கள் பலரும் இதே போலத்தான் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அரசியல்வாதிகள் மட்டுமே அநியாயத்துக்கு அடம் பிடித்து பிரச்சினையை பகையாக மாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment