ஆதிபகவன் - கனடாவில் ஆடியோ ரிலீஸ்!!

|

Aadhi Bhagavan Audio Release Canada   

அமீர் இயக்கத்தில், ரொம்ப நாளாக உருவாகிக் கொண்டிருக்கும் ஆதி பகவன் படத்தின் இசை வெளியீடு கனடாவில் நடக்கும் எனத் தெரிகிறது.

ஜெயம் ரவி- நீது சந்திரா நடித்துள்ள ஆதி பகவன் படத்தை, திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் தயாரித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளன.

இதுவரை அமீர் இயக்கிய அத்தனைப் படங்களுக்குமே யுவன்தான் இசை தந்திருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வந்த அனைத்துப் படங்களின் பாடல்களுமே பெரும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக பருத்திவீரன் பாடல்கள் க்ளாஸிக் எனும் அளவு அழகாக அமைந்திருந்தன.

ஆதிபகவன் இசை மிகச் சிறப்பாக வந்திருப்பதாக யுவன் சங்கர் ராஜாவும் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த அமீர், ஹஜ் சென்று வந்தார். இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படுவிறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

வரும் செப்டம்பர் 29-ம் தேதி கனடாவின் தலைநகரில் இசை வெளியீட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

கனடாவில் தமிழ் சினிமா இசை வெளியீடு நடப்பது இதுவே முதல்முறை.

 

Post a Comment