தீபிகாவின் நடிப்புத் திறமைக்காக அவருக்கு ஸ்மிதா பட்டீல் நினைவு விருது வழங்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்டபின்னர் பேசிய தீபிகா, இதுபோன்ற விருதுகள் தனக்கு மேலும் உற்சாகம் அளிப்பதாக கூறியுள்ளார்.
நடிப்பிற்காக தேசிய விருது வாங்க வேண்டும் என்று எல்லோரையும் போல எனக்கும் ஆசை இருக்கிறது. அது நிச்சயம் நிறைவேறும். கேமரா முன் நிற்கும் போது விருதுக்காக நடிக்கிறோம் என்று நினைக்காமல் இயல்பாக நடிப்புத்திறமையை வெளிப்படுத்த வேண்டும். அதுவே நமக்கு விருதினை பெற்றுத்தரும் என்று தீபிகா தெரிவித்துள்ளார்.
இதனிடைய தீபிகாவின் நடிப்பை நடிகை ஸ்ரீதேவி புகழ்ந்துள்ளார். சமீபத்திய நடிகைகளில் தீபிகாவின் நடிப்பு தனக்கு பிடிக்கும் என்றும் ஸ்ரீதேவி கூறியிருந்தார். இது குறித்து கருத்துக் கூறிய தீபிகா, மிகப்பெரிய நடிகையான ஸ்ரீதேவி இங்கிலீஸ்,விங்கிலீஸ் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்திருப்பது என்னைப் போன்ற நடிகைக்கு உற்சாகம் தருகிறது. அவ்வளவு பெரிய நடிகை என் நடிப்பை புகழ்ந்திருப்பது எனக்கு மிகப்பெரிய விருது கிடைத்ததைப் போல உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
Post a Comment