கவுரவம் பட நாயகி யாமி படப்பிடிப்பில் காயம்!

|

Yami Gautham Injured On Gouravam Sets

ராதாமோகன் இயக்கும் கவுரவம் படத்தின் நாயகி யாமி படப்பிடிப்பில் படுகாயமடைந்தார்.

பயணம் படத்துக்குப் பிறகு ராதா மோகன் இயக்கும் படம் கவுரவம். இதில் நாயகனாக அல்லு சிரிஷ், நாயகியாக யாமி கவுதம் நடிக்கின்றனர். யாமி மும்பையை சேர்ந்தவர். கவுரவம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தை வழக்கம்போல பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக படக் குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். பாடல் காட்சியொன்றில் யாமி சைக்கிள் ஓட்டிக் கொண்டுபோவதுபோல படமாக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது தடுமாறி சைக்கிலோடு கீழே விழுந்தார் யாமி. அவருக்கு பலத்த அடிபட்டது. உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரை ஓய்வெடுக்க டாக்டர் அறிவுறுத்தியதால், அன்றைய படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து யாமி கூறுகையில், "ஸ்பாட்டில் டாக்டர் இருந்ததால் பெரிய பாதிப்பில்லாமல் தப்பித்தேன்," என்றார்.

 

Post a Comment