கரீனா, சைப் திருமணம் நடக்கிறது மாதிரி தெரியலையே: சல்லு குண்டு

|

Salman Drops Bomb On Saifeena Wedding

பாலிவுட் நடிகை கரீனா கபூர், நடிகர் சைப் அலி கான் திருமணம் வரும் அக்டோபர் மாதம் 16ம் தேதி நடக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் மணமக்கள் இது பற்றி பேச மறுக்கின்றனர். அதனால் அவர்கள் திருமணம் நடக்குமா, நடக்காதா என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் திருமணம் பற்றி நடிகர் சல்மான் கானிடம் கேட்டதற்கு, அவர் கூறுகையில்,

எனக்கு இதுவரைக்கும் அழைப்பிதழ் வரவில்லை. அதனால் திருமணம் நடக்கும் என்று எனக்கு தோணவில்லை என்றார்.

சரி நீங்கள் திருமணம் செய்து கொண்டால் யார், யாரையெல்லாம் அழைப்பீர்கள் என்று கேட்டதற்கு, திருமணம் ஒருவருடைய சொந்த விஷயம். அதனால் நான் திருமணம் செய்து கொள்ளும்போது யாரையும் அழைக்க மாட்டேன் என்றார்.

ஏற்கனவே சைப், கரீனா திருமணம் பற்றி சந்தேகங்கள் இருக்கையில் சல்லு வேறு பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளார். ஒரு வேளை காதலர்களாகவே இருக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்களோ?

 

Post a Comment