கோஹ்லி- தமன்னா ஜோடி இணைந்து கலக்கப் போகும் செல்போன் விளம்பரம்

|

Virat Kohli Tamanna Getting Together For 60 Seconds   

ஹைதராபாத்: கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியும் நடிகை தமன்னாவும் இணைந்து செல்போன் விளம்பரம் à®'ன்றில் கலக்க உள்ளனர்.

தமன்னாவைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே பல விளம்பரப் படங்களில் நடித்து வருகிறவர். இப்போது கோஹ்லியுடன் முதல் முறையாக இணைந்து விளம்பரப் படத்தில் கலக்க உள்ளார்.

இருவரும் இணைந்து கலக்க இருக்கும் விளம்பரம் 60 செகண்டுகள் இருக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இதை அனேகமாக தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் உருவாக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

கோஹ்லி-தமன்னா இருவரும் குறிப்பிட்ட செல்போன் நிறுவனத்தின் தூதர்களாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து இந்த விளம்பரப் பட தகவல் வெளியாகி உள்ளது.

 

Post a Comment