இந்திக்குப் போகிறது பாகன்!

|

Paagan Goes Bollywood

தமிழில் டீசன்டான வெற்றிப் படம் என பெயரெடுத்த கையோடு, இந்திக்குப் போகிறது ஸ்ரீகாந்த் நடித்த பாகன்.

தமிழில் இந்தப் படத்தை இயக்கிய அஸ்லமே இந்திப் பதிப்பையும் இயக்குகிறார்.

ஸ்ரீகாந்த் - ஜனனி நடித்த பாகன், சின்ன பட்ஜெட்டில் நிறைவான லாபம் தந்த படமாக உருவெடுத்துள்ளது. மேலும் ஸ்ரீகாந்த்துக்கு அவரது பழைய மார்க்கெட்டை திரும்பப் பெற வைத்திருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்த பாலிவுட்காரர்கள், கிட்டத்தட்ட ப்ரியதர்ஷன் படம் மாதிரி இருக்கிறது என்று கூறி, படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளார்களாம்.

தமிழில் படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்லம்தான் இந்திப் பதிப்பையும் இயக்குகிறார்.

இந்தப் படத்தை ஆரம்பத்தில் தெலுங்கில் டப் செய்து வெளியிட நினைத்தவர்கள், இப்போது தெலுங்குக்கு ஏற்ற மாதிரி புதிய திரைக்கதை எழுதி ரீமேக் பண்ணும் முடிவில் உள்ளார்களாம்.

தெலுங்கு ரசிகர்களுக்கு ஸ்ரீகாந்த் ரொம்பவே பழக்கமானவர் என்பதால், அவரே ஹீரோவாக நடிக்கப் போகிறாராம்.

 

Post a Comment