வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமாவை மக்கள் மீண்டும் வெற்றி பெற செய்தால், மேடையில் எனது ஆடைகளை துறந்து நிர்வாண கோலத்தில் நிற்கத் தயார் என்று பிரபல பாப் பாடகி மடோனா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் மடோனா கலந்து கொண்டார். அப்போது ரசிகர்களிடையே ஒபாமாவுக்கு ஆதரவு கோரி பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
ஒபாமாவிற்கு ஓட்டு போடுவது நல்லதோ, கெட்டதோ, அவருக்கு ஓட்டு போடுங்கள். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பு முஸ்லீம் உள்ளார். அவருக்கு ஓட்டு போடுவதன் மூலம் நாட்டிற்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும். அவர் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார். அதற்காக அவரை ஆதரித்து ஓட்டு போடுங்கள்.
ஒபாமா ஒரு முஸ்லிம் அல்ல, அவர் கிறிஸ்தவர் என்பது எனக்கு தெரியும். ஆனால் நம் நாட்டில் பலரும் அவரை ஒரு முஸ்லிம் என்றே நினைத்து வருகின்றனர். என்னை பொறுத்த வரை ஒரு நல்ல மனிதன் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் நல்லவராகவே இருப்பார். ஒபாமா எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.
அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமா, மீண்டும் அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றால், மேடையிலேயே எனது ஆடைகளை களைய தயாராக உள்ளேன் என்றார்.
பின்னர் அதிபர் தேர்தலில் ஒபாமாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மேடையில் ரசிகர்களுக்கு முன்பாக மடோனா தனது மேலாடையை கழற்றினார். அதன்பிறகு தனது முதுகைத் திருப்பிக் காட்டி அதில் 'ஒபாமா' என்று ஆங்கிலத்தில் பச்சைக்குத்தி இருப்பதை ரசிகர்களுக்கு காட்டி உற்சாகப்படுத்தினார்.
Post a Comment