திருவனந்தபுரம்: மலையாள திரைப்பட நடிகரான திலகன் இன்று அதிகாலை காலமானார்.
77 வயதாகும் திலகன் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்தவர். கடந்த மாதம் 23-ந் தேதி மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று அதிகாலை 3.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
1979-ம் ஆண்டு மலையாள திரைப்படம் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார். தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தவர் திலகன். மொத்தம் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தேசிய மற்றும் மாஇந்ல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
2009-ம் ஆண்டு பம்தஸ்ரீ விருது திலகனுக்கு வழங்கப்பட்டது. திலகனுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.
Post a Comment