டைட்டானிக் படம் வந்து 15 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் கூட அப்படத்தை பார்க்கும்போதெல்லாம் அழுது விடுகிறாராம் ரிச்சா கங்கோபாத்யாயா.
டைட்டானிக் படத்தை 11வது முறையாக சமீபத்தில் டிவியில் பார்த்தபோது தன்னையும் அறியாமல் அழுது விட்டதாக கூறியுள்ளார் ரிச்சா. இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜாக் மற்றும் ரோஸ் நடிப்பு என்னை சிலிர்க்கச் செய்து விட்டது என்று சிலிர்த்துக் கூறியுள்ளார்.
தமிழில் மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்துள்ள ரிச்சா, தெலுங்கில் ரவிதேஜாவுடனும், நாகர்ஜூனா மகனுடனும் நடித்து வருகிறார்.
பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள்தான், அதற்காக இத்தனை வருடங்கள் தாண்டியுமா அழுவுறது... ஒஸ்தி ரிச்சா, இது கொஞ்சம் சாஸ்திதான்...!
Post a Comment