சாக்லேட் மழையும் சங்கீத மழலைகளும்...

|

Vijay Tv Super Singer Junior Season

ரியாலிட்டி ஷோ என்றாலே அழுகையும், சோகமுமாய்தான் இருக்கவேண்டுமா என்ன அதில் ஆனந்தத்தை புகுத்த முடியும் என்று சமீபகாலங்களில் நிரூபித்து வருகின்றனர் விஜய் டிவியினர். சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர் சிறுமியர்கள் இதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகின்றனர்.

ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் குழந்தைகளின் மனது காயப்படுத்தப்படுவதாகவும், அவர்கள் அழுது மனது வருத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது போன்ற புகார்கள் தற்போதைய சீசனில் எழுந்ததாக தெரியவில்லை.

ரீமிக்ஸ் பாடலோ, கர்நாடக சங்கீதமோ, மெலடியோ எந்த பாடல்கள் என்றாலும் குழந்தைகள் அழகான குரலில் அசத்தலாய் பாடுகின்றனர். பாடலுக்கு ஏற்ற பாராட்டுக்களை தெரிவிக்கும் நடுவர்கள் மனோ, சித்ரா, சுபா ஆகியோர் ஒவ்வொரு விசயத்தையும் குறிப்பிட்டு வாழ்த்துகின்றனர்.

இப்பொழுது மெலடி சுற்று போய்க்கொண்டிருக்கிறது. என்னுள்ளே என்னுள்ளே ஒரு மின்னல் எழும் நேரம் என்று ஒரு சிறுமி பாடியதும் நமக்குள்ளே எழும் இன்ப அதிர்வை சொல்ல வார்த்தைகள் இல்லை.

பாடல் பாடி முடித்த உடன் சங்கீத மழலைகளுக்கு சாக்லேட் மழை பொழிவதுதான் நிகழ்ச்சியின் சிறப்பம்சம். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் கண்களின் ஓரத்தில் தோற்றும் ஆனந்த கண்ணீர் அற்புதமான தருணம்.

 

Post a Comment