என்னை கன்னடர்கள்தான் அதிகம் பார்த்து ரசிக்க வேண்டும்.. லட்சுமி ராய்

|


I Want Kannada Audience See Me More Than Anybody Else   
பெங்களூர்: பெல்காம் பைங்கிளி லட்சுமி ராய் கை நிறையப் படங்களுடன் இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் கூட பயங்கர பிசியாகத்தான் இருக்கிறார். விக்ரமுடன் தாண்டவம் படத்தை முடித்துள்ள லட்சுமி ராய் இப்போது தாய் மொழியான கன்னடத்தில் 2 படங்களில் நடித்து வருகிறாராம். தன்னை மற்ற மொழி ரசிகர்களை விட கன்னடத்து ரசிகர்கள்தான் அதிகம் பார்த்து ரசிக்க வேண்டும் என்றும் மொழிப் பற்றுடன் பேசுகிறார் லட்சுமி.

லட்சுமி ராய் நடித்து வந்த படங்களை விட அவரை வைத்து வந்த வதந்திகள்தான் ஏகம். இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், தான் உண்டு, தனது வேலையுண்டு என்று பிசியாகத்தான் இருந்து வருகிறார் லட்சுமி.

கன்னடத்திலிருந்து ஆரம்பித்த அவரது திரை வாழ்க்கை இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எங்கெங்கோ போய் விட்டது. இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் அட்டகாசா மற்றும் கல்பனா ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார் லட்சுமி ராய்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கன்னடத்தில் நடிப்பதை எப்போதுமே வெறுத்ததில்லை. உண்மையில் இங்குதான் எனது வாழ்க்கை தொடங்கியது. மற்ற மொழி ரசிகர்களை விட கன்னட ரசிகர்கள்தான் என்னை அதிகம் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்றார் அவர்.

தமிழில் ஹிட்டடித்த காஞ்சனா படம்தான் கன்னடத்தில் கல்பனா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தமிழில் நடித்த அதே வேடத்தில்தான் கல்பனாவிலும் லட்சுமி ராய் நடிக்கிறார்.

மேலும் லட்சுமி கூறுகையில், நான் நடிக்க வந்து 13 வருடங்களாகி விட்டது. இன்னும் அலுப்பில்லாமல் போய்க் கொண்டிருக்கிறேன்.இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. பாலிவுட்டுக்கும் போவேன். எனக்கு வயது இருப்பதால் அதற்கேற்ப கவர்ச்சியுடனும் நான் நடித்து வருகிறேன் என்றார்.
 

Post a Comment