த்ரிஷாவை திருமணம் செய்ய ராணாவுக்கு குடும்பத்தில் பெரும் எதிர்ப்பு?

|

Raana S Family Opposes His Love With Trisha   

ஹைதராபாத்: நடிகை த்ரிஷாவை திருமணம் செய்ய தெலுங்கு நடிகர் ராணாவுக்கு அவர் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

முன்னணி நடிகை திரிஷாவும் நடிகர் ராணாவும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். அதனை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் விருந்து நிகழ்ச்சிகளுக்கும் படவிழாக்களுக்கும் ஜோடியாக போய் வருவது வழக்கம்.

சமீபத்தில் ஒரு பத்திரிகைக்காக இருவரும் மிக நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட கணவன் மனைவி ரேஞ்சுக்கு நெருக்கமாக இருந்தனர் இருவரும்.

இதனால் அவர்கள் காதல் உறுதியாகிவிட்டதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் செய்தி பரவி வந்தது.

ராணா குடும்பத்தினர் ஆந்திராவில் பெரிய கோடீஸ்வரர்களாக உள்ளனர். பிரபல தயாரிப்பாளர் ராமா நாயுடுவின் பேரன்தான் இந்த ராணா. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் ராணாவுக்கு உறவினர். ஆந்திராவில் ராணாவுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் ஏராளமான பங்களா வீடுகள் உள்ளன.

த்ரிஷாவை காதலிப்பது ராணா பெற்றோருக்கு பிடிக்கவில்லையாம்.

த்ரிஷாவைப் பிரிந்துவிடுவதுதான் நல்லது என ராணாவுக்கு அட்வைஸ் பண்ணி வருவதாக ஆந்திர பத்திரிகைகள் பரபரப்பு கிளப்பியுள்ளன.

 

Post a Comment