நியூயார்க்: ரோட்டில் நின்றிருந்தவரை காரால் இடித்துத் தள்ளி விட்டு போன நடிகை லின்ட்சே லோஹனை போலீஸார் கைது செய்தனர்.
26 வயதாந லின்ட்சேவை நியூயார்க் போலீஸார் கைது செய்துள்ளனர். மிகவும் குறைந்த வேகத்தில் கார் வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. புதன்கிழமை நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மன்ஹாட்டனில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்தார் லின்ட்சே. அங்கிருந்த பார்க்கிங் பகுதியில் நுழைந்த அவர் காரைப் பார்க் செய்ய முயன்றபோது அருகில் நின்றிருந்த ஒருவர் மீது மோதி விட்டார். இதில் அந்த நபருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு விட்டது.
ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் காரை விட்டு இறங்கி ஹோட்டலுக்குள் போய் விட்டார் லோஹன். இந்த விபத்தை நேரில் பார்த்த சிலர் உடனே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கவே அவர்கள் விரைந்து வந்து காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் நேராக ஹோட்டலுக்குள் சென்று லோஹனைக் கைது செய்து கொண்டு சென்றனர்.
இருப்பினும் தற்போது அவரை ஜாமீனில் போலீஸார் விடுவித்துள்ளனர்.
Post a Comment