சென்னை: மலையாளத்தில் 25 படங்களை இயக்கியுள்ள திணேஷன் என்ற இயக்குநர் இயக்கத்தில் முதல் தமிழ்ப் படமாக ஓடுதளம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
மலையாளத்தைச் சேர்ந்த ஸ்ரீஜித், ரூபிகா இணையில் உருவாகியுள்ள இப்படத்தில், பெரும்பாலும் மலையாள முகங்களே நிரம்பியுள்ளன. இருப்பினும் இயக்குநர் ரவி மரியா, தேனி முருகன் ஆகிய தமிழ் முகங்களையும் போட்டு இதை ஒரு தமிழ்ப் படமாக மாற்றியுள்ளார் திணேஷன்.
இப்படத்தின் கதை என்னவென்று தெரியவில்லை. ஆனால் படத்தில் கவர்ச்சிக்குப் பஞ்சமில்லை என்று தெரிகிறது. இப்படத்தில் அனுராதா ஸ்ரீராம், மகதி, கல்பனா மற்றும் நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோர் இணைந்து ஒரு கலக்கலான பாடலைப் பாடியுள்ளனர்.
வாத்யாஸனா, வாத்ஸாயனா வருகை தருவாயா
ஒரு வரியில் என்னை எழுதி உரைகள் தருவாயா என்று ஆரம்பிக்கும் ஒரு பாடலை இவர்கள் நால்வரும் இணைந்து பாடியுள்ளனராம். இந்தப் பாடலை மிகு்த ரசனையோடு காமம் பெரிதாகத் தெரியாத வகையில் படமாக்கியுள்ளாராம் திணேஷன். யார் கண்ணன் இப்பாடலை எழுதியுள்ளார்.
படம் வரட்டும், எப்படி இருக்குதுன்னு பார்ப்போம்...
Post a Comment