கிராமத்து விளையாட்டை கண்முன் நிறுத்தும் ஹோம் சுவீட் ஹோம்!

|

Home Sweet Home Game Show

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று 7சி சீரியல் குடும்பத்தினர் பங்கேற்று விளையாடினர். தலைமையாசிரியர், ஸ்டாலின் ஆசிரியர் ஒரு டீம், துணை தலைமை ஆசிரியர், ஐஸ்வர்யா மற்றொரு டீமாக விளையாடினர்.

நிகழ்ச்சியின் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. 7சியின் பாடலைப் பாடி மாணவ, மாணவிகள் அசத்தினர். நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்யதர்சினியே சிறுவர், சிறுமிகளின் லூட்டியைப் பார்த்து வாயடைத்துப் போனார்.

அன்றைய நிகழ்ச்சியில் கிராமத்து விளையாட்டினை கண் முன் நிறுத்தினர். பலூன் உடைத்தல், பானை உடைத்தல், உண்டி வில் அடித்தல் என அணியினர் விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். நிகழ்ச்சியின் இடை இடையே நடனம் ஆடி ஆசிரியர்களை ஊக்கப்படுத்தினர் மாணவர்கள். பானை உடைத்தல் போட்டியில் தலைமை ஆசிரியர் அற்புதமான பானை உடைத்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

ஹோம் சுவீட் ஹோம் கனவு இல்லத்திற்கான விளையாட்டு என்றாலும் விநாயகர் சதுர்த்திப் ஸ்பெசல் நிகழ்ச்சி அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.

சனிக்கிழமையன்று நிகழ்ச்சியில் கதாநாயகிகள் மோதிக்கொள்கிறார்கள். கஸ்தூரியும், சொர்ணமால்யாவும், எதிரெதிராக விளையாடி தங்களின் திறமையை நிரூபிக்க உள்ளனர்.

 

Post a Comment