பெங்களூர்: கும்மென்று தனது கவர்ச்சிப் படங்களை டிவிட்டரிலும், தனது இணையதளத்திலும் போட்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் பூனம் பாண்டே இந்தியில் ஒரு படத்தில்நடிக்கப் போகிறார் என்பது பழைய செய்தி. இப்போது கன்னடத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு கவர்ச்சியாட்டம் போடப் போகிறார் என்பது புதுச் செய்தி.
இந்தியில் வித்யா பாலனின் நடிப்பில் வெளியாகிய டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை கன்னடத்தில் டர்ட்டி பிக்சர்ஸ் - சில்க் சக்காத் மகா என்ற பெயரில் ரீமேக் பண்ணுகிறார்கள். இதில், பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், சில்க் வேடத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் படத்தில் இரண்டு குத்துப் பாட்டுக்களை படு கவர்ச்சியாக படமாக்கி இணைக்கப் போகிறார்களாம். இதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 2 கவர்ச்சி நடிகைகளை இறுதி செய்து அவர்களிடம் பேசியுள்ளனராம். அதேசமயம், ஒரு பாட்டுக்கு ஆட நம்ம ஊர் பூனம் பாண்டே ஒப்புக் கொண்டுள்ளாராம்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் திரிஷூல் கூறுகையில், இரண்டு பாகிஸ்தானிய நடிகைகளைத் தொடர்பு கொண்டுள்ளோம். பேசி வருகிறோம். யாருடைய பட்ஜெட் சரிப்பட்டு வருகிறதோ அவரை பிக்ஸ் செய்வோம்.
இன்னொரு பாட்டுக்கு பூனம் பாண்டே ஆடுவார். அவர் ஆட ஒப்புக் கொண்டு விட்டார். சம்பளம் குறித்து தற்போது பேச்சு நடக்கிறது என்றார்.
மொத்தத்தில் படம் முழுக்க ஏகப்பட்ட டர்ட்டி இருக்கும் போலத் தெரிகிறது....
Post a Comment