சென்னை: நடிகர் அஜீத்தின் மைத்துனரும், நடிகை ஷாலினியின் அண்ணனுமான ரிச்சர்ட் ரிஷி, கவியரசு கண்ணதாசனின் பேத்தி சத்யலட்சுமியை மணம் செய்யவுள்ளார்.
செப்டம்பர் 23ம் தேதி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெறவுள்ளது. திருமண தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லையாம்.
இதுகுறித்து ரிச்சர்ட் கூறுகையில், நிச்சயதார்த்தம் முடிந்து 2 மாதங்களுக்குள் திருமணம் நடைபெறும். இது காதல் திருமணம் அல்ல, பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்த திருமணம்தான். இரு வீட்டாரும் நீண்ட கால நண்பர்கள். அந்த அடிப்படையில் எனக்கும், சத்யலட்சுமிக்கும் 3 வயதிலிருந்தே நல்ல நட்பு இருந்தது. இப்போது அது திருமணத்தில் முடிகிறது என்றார்.
சத்யலட்சுமி பல் மருத்துவர் ஆவார். ஏஜி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் படத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் வெளியாகவுள்ள முதல் படம் பொன்மாலைப் பொழுது. விரைவில் இது திரைக்கு வரவுள்ளது. இதில் சத்யலட்சுமியின் சகோதரர் ஆதவ் ஹீரோவாக நடித்து அறிமுகமாகிறார்.
ரிச்சர்ட் தமிழில் தற்போது ரெண்டாவது படம், கூத்து, சுற்றுலா, ஜடாயு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment