சென்னை: பாடகர் க்ரிஷ் சென்ற விமானம் அவசரமாக மலேசியாவில் தரையிறக்கப்பட்டதையடுத்து அவருக்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார் அஜீத் குமார்.
பாடகர் க்ரிஷ் அண்மையில் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அது மலேசியாவின் பெனாங்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து கேள்விப்பட்ட அஜீத் குமார் உடனே க்ரிஷ் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு அவரது மலேசிய நம்பரை வாங்கியுள்ளார். இதையடுத்து க்ரிஷுக்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார்.
அஜீத் தனது மலேசிய நம்பரை கண்டுபிடித்து அழைத்து நலம் விசாரித்ததில் க்ரிஷுக்கு ஒன்றுமே புரியவில்லையாம். அடடா அஜீத்துக்கு என்மேல் தான் எவ்வளவு பாசம் என்று உருகிவிட்டாராம். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு எஸ்.எம்.எஸ். அனுப்பி விசாரித்துள்ளார். எத்தனை நண்பர்கள் இருந்தாலும் அதில் அஜீத் மட்டுமே போன் செய்து விசாரித்தது க்ரிஷுக்கு ஏக சந்தோஷம். அஜீத் குரலைக் கேட்டு நெகிழ்ந்துள்ளார்.
அஜீத் தனது நண்பர்கள் மற்றும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவத் தயங்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
Post a Comment