ஐஸ்வர்யா ராய் குழந்தை.. படமெடுத்து வெளியிட்ட புகைப்படக்காரர்கள்!

|

Aishwarya Rai Daughter Aaradhya Face Finally Revealed   

முன்னாள் உலக அழகியும் டாப் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானதிலிருந்து குழந்தை பிறந்து இப்போது வெளியே நடமாடத் தொடங்கியது வரை எல்லாமே பரபரப்புச் செய்தியாகிவிட்டன.

அமிதாப் பச்சன் குடும்பத்தினர் மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராத்யாவை பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்தனர். குறிப்பாக குழந்தையின் முகத்தை யாரும் படமெடுக்காத வகையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் கணவரின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் சென்றபோது விமான நிலையத்தில் வளைத்து வளைத்து போட்டோ எடுத்துத் தள்ளிவிட்டனர். இந்த முறை ஐஸ்வர்யா ராயால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அபிஷேக்பச்சன் சிக்காகோவில் ‘டூம் 3' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காகத்தான் ஐஸ்வர்யா ராய் மும்பையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு நியூயார்க் சென்றார்.

சிகாகோ மற்றும் நியூயார்க் விமான நிலையங்களில் ஐஸ்வர்யா ராயைப் பார்க்க ஏராளமானோர் கூடிவிட்டதால், பாதுகாவலர்கள் அவரையும் குழந்தையையும் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

 

Post a Comment