மகத், மஞ்சு மனோஜ்... அடுத்து ஆர்யா? -மறுக்கிறார் டாப்ஸி

|

Tapsee Denies Affair With Arya   

டாப்ஸியின் காதல்கள் என்று தனியாகவே ஒரு படம் எடுக்கலாம் போலிருக்கிறது. அத்தனை அக்கப்போர் அவரைச் சுற்றி.

ஆரம்பத்தில் மகத்தை அவர் காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் மோகன்பாபு குடும்பத்துடன் நெருக்கம் ஏற்பட்டதும், மகத்தை கழட்டிவிட்டுவிட்டாராம்.

மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணுவுடன் முதலில் நடித்தார். ரொம்ப நெருக்கம் காட்டியிருந்தார். ஆனால் வெளியில் அவர் எனக்கு அண்ணன் மாதிரி என்றார்.

அடுத்து இளையமகன் மஞ்சு மனோஜுடன் நடித்தார். இருவருக்கும் பற்றிக் கொண்டது. இந்த காதல் மகத்தை மகா ஆத்திரம் கொள்ள வைக்க, சமீபத்தில் சென்னையில் நடந்த மதுவிருந்தில் மகத்தும் மனோஜும் மோதியதும், மகத் மூக்குடைந்து மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றதும், மனோஜை போலீஸ் முதலில் துரத்தி பின் மேலிட தலையீட்டால் மூச்சுக்காட்டாமல் அடங்கியதும் தெரிந்திருக்கும்.

இப்போது டாப்ஸிக்கு ஆர்யா மீது பெரும் ஈர்ப்பு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

அஜீத் - ஆர்யா நடிக்கும் புதுப் படத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து டாப்ஸிக்கு இந்த ஈர்ப்பாம்.

ஆனால் இது காதலில்லை என்கிறார் டாப்ஸி.

அவர் கூறுகையில், "விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் ஆர்யாவுடன் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து இதுபோன்ற செய்திகள் வருகின்றன. அவர் என்னுடன் நடிக்கும் சக நடிகர்தானே தவிர அவரை நான் காதலிக்கவில்லை. யாரையாவது என்னுடன் இணைத்து எழுதுவதில் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுகிறார்களோ தெரியவில்லை," என்றார்.

 

Post a Comment