எவ்ளோ கவர்ச்சி.. முத்தக் காட்சி.. நான் மாட்டேம்பா! - த்ரிஷா

|

Trisha Denies Glam Offers   

இந்திப் படங்களில் ஏக கவர்ச்சியும் முத்தக் காட்சிகளும் இருப்பதால் அந்தக் கதைகளை நிராகரித்துவிட்டதாகக் கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.

அசின், ஜெனிலியாவைப் பார்த்து த்ரிஷாவுக்கும் பாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

விளைவு, 2010-ல் காட்டா மீட்டா இந்திப் படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்தார். அப்படம் படு தோல்வி அடைந்தது. அதன் பிறகு தம்மாத்துண்டு உடையில் போட்டோ ஷூட் செய்து வாய்ப்பு தேடிப் பார்த்தார். ஆனால் எதுவும் அமையவில்லை.

சீச்சீ இந்திப் படம் சரியில்ல... என்று கமெண்ட் அடித்தபடி, மீண்டும் தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தினார். தற்போது சமர், பூலோகம், என்றென்றும் புன்னகை என மூன்று தமிழ் படங்கள் கைவசம் உளள்ன.

இதற்கிடையில் இந்தி இயக்குனர்கள் சிலர் திரிஷாவை அணுகி தங்கள் படங்களில் நடிக்க அழைத்துள்ளனர். இம்ரான் ஹஷ்மி ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க அழைத்தனர். அவற்றின் கதைகளை கேட்ட திரிஷா, "என்ன இவ்ளோ கவர்ச்சி சீன்ஸ் வச்சிருக்கீங்க... தாறுமாறா முத்தக் காட்சி வேற இருக்கு... நமக்கு இது ஒத்துவராது," என்றாராம்.

உங்க போட்டோஸ் பாத்துதான் இந்த கதைக்கு நீங்க செட் ஆவீங்கன்னு நெனச்சோம் என்றார்களாம் பதிலுக்கு.

அது அப்போ... இனி நோ கவர்ச்சி என்று கறாராக சொல்லிவிட்டாராம் த்ரிஷா!

 

Post a Comment