இளையராஜாவின் 'நீ தானே என் பொன் வசந்தம்' - ஆடியோ விற்பனையில் சாதனை

|

Neethane En Ponvasantham Creates Record In Audio Sales

சென்னை: இளையராஜா இசையில் வெளியாகியிருக்கும் நீதானே என் பொன் வசந்தம் படத்தின் இசைக் குறுந்தகடுகள் விற்பனையில் பெரும் சாதனைப் படைத்துள்ளன.

ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நீ தானே என் பொன் வசந்தம்'. இப்படத்தின் முனோட்டம் இன்டெர்நெட்டில் 3 நாட்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக இளையராஜா - கவுதம் மேனன் இந்தப் படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளனர். இதனால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்தது. அதை நிறைவேற்றும் விதத்தில் இளையராஜா பிரமாதமான இசையை படத்துக்குக் கொடுத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

படத்தின் பாடல்கள் கவனத்தை ஈர்த்து அனைவரின் பாராட்டுக்கும் ஆளாகியிருப்பதாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

படத்தின் ஆடியோ சிடி சோனி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. வெளியாவதற்கு முன்னரே ஒரு லட்சம் சிடிக்கள் முன்பதிவு செய்யப்பட்டதாகவும் குமார் தெரிவித்தார்.

'பலரும் இந்த சிடியை பொக்கிஷம் போல கருதி பாதுக்காக்கின்றனர். பாடல்களை டவுண்லோடு செய்வதே வழக்கமாக இருக்கும் நிலையில் ஆடியோ சிடியை ரசிகர்கள் ஆர்வத்தோடு வாங்கி வருகின்றனர்.

செயற்கை ஒலிகள் இல்லாமல் லண்டன் ஆர்கெஸ்ட்ரா பங்களிப்போடு இயல்பான மெல்லிசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திழுத்துள்ளது', என்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.

 

Post a Comment