'ரஜினி-கமலுடன் மீண்டும் நடிப்பேன்' - ஸ்ரீதேவி

|

Sridevi Proud Rajini Kamal S Co Sta

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மீண்டும் நடிப்பேன், என்று நடிகை .தேவி கூறினார்.

14 ஆண்டுகளுக்கு முன் இந்திப் படத் தயாரிப்பாளர் போனிகபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை நாயகியாக்கும் முயற்சியிலும் உள்ளார் ஸ்ரீதேவி.

இந்த நிலையில் 14 வருடங்களுக்குப்பின் அவர், மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தமிழ்-இந்தி ஆகிய 2 மொழிகளில் உருவாகும் 'இங்கிலீஷ்-விங்கிலீஷ்' என்ற படத்தின் மூலம் அவர் மறுபிரவேசம் செய்து இருக்கிறார்.

இந்த படத்தின் `டிரைலர்' வெளியீட்டு விழா, சென்னை பி.வி.ஆர். தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. அதில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி, நிருபர்களிடம் கூறுகையில், "இத்தனை காலம் நடிக்காமல் இருந்ததற்குக் காரணம், என் மகள்கள் இருவரும் சின்ன குழந்தைகளாக இருந்தார்கள். அவர்களை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. இப்போது அவர்கள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன்," என்றார்.

உங்களுக்கு ஜோடியாக நடித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இன்னமும் முதல் நிலை கதாநாயகர்களாக நடித்துக் கொண்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோது, "பெருமையாக உணர்கிறேன்.. அவர்களின் இணையற்ற உழைப்பின் பலன் அது. அவர்களுடன் பல ஆண்டுகள் பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.

ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா?, என்று கேட்டபோது,

"நிச்சயமாக நடிப்பேன். இரண்டு பேரையும் சமீபத்தில் கூட சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் நியாயமாக இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். பொருத்தமான சூழல் அமைய வேண்டும்," என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் பால்கியிடம், 'உங்கள் படங்களுக்கு இளையராஜாதானே இசை அமைப்பார். இந்தப் படத்துக்கு வேறு இசையமைப்பாளரை போட்டிருப்பதற்குக் காரணம் என்ன?" என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த பால்கி, "இந்தப் படத்துக்கு நான் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என விரும்பினேன். காரணம் நான் ராஜா இசை கேட்டு வளர்ந்தவன். ஆனால் என் மனைவி அப்படி இல்லை. அவர்தான் இந்தப் படத்துக்கு இயக்குநர்.

என்னைப் பொருத்தவரை, எந்த இயக்குநராக இருந்தாலும் இளையராஜாவின் இசையைத்தான் பரிந்துரைப்பேன்,' என்றார்.

 

Post a Comment