மும்பை: பிரபல சோப்பு விளம்பர படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கையில் எப்பவும் கூலாக இருக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் டென்ஷனாகிவிட்டாராம்.
பாலிவுட் பிரபலங்களில் பலர் விளம்பரப் படங்களில் நடித்து பணம் பார்க்கின்றனர். அதிலும் கத்ரீனா கைப் விளம்பரப் படங்களில் அதிகம் நடிக்கிறார். அதுவும் அதிக சம்பளம் பெற்று நடிக்கிறார். ஒரு பிரபல சோப்பு கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். அந்த நிறுவன சோப்பு விளம்பரப் படப்பிடிப்பு அண்மையில் நடந்துள்ளது.
அப்போது கத்ரீனா குளிக்கும் தொட்டியில் படுத்து வாலிப நெஞ்சங்களை சுண்டி இழுக்கும் ஒரு முகப்பாவனை கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். அவரும் ஓ.கே. சொல்லிவிட்டு தொட்டியில் படுத்து முகப்பாவனை செய்துள்ளார். அதற்கு இயக்குனர் இன்னும் கொஞ்சம் மயக்கும்படி போஸ் கொடுங்களேன் என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட கத்ரீனா கடுப்பாகி இயக்குனரை எச்சரி்த்துள்ளார். அதன் பிறகு சத்தமில்லாமல் ஷூட்டிங்கை முடித்துவிட்டு பேகக்ப் செய்துள்ளனர். அது என்னவோ கத்ரீனா வரும் பெரும்பாலான விளம்பரங்களில் வாலிபர்களை மயக்கும் முகபாவனையையே காட்ட வைக்கிறார்கள்.
Post a Comment