பர்ஃபி கதை சுட்டதா, சுடாததா?

|

Is Barfi Story Copied One

மும்பை: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தி படமான பர்ஃபியின் கதை சுடப்பட்டது என்று கூறப்படுகிறது.

அனுராக் பாசு இயக்கத்தில் ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா, இலியானா நடித்த வெற்றிப் படம் பர்ஃபி. இந்த படத்தில் ரன்பீர் காது கோளாத வாய் பேசமுடியாதவராகவும், பிரியங்கா ஆட்டிஸம் பாதித்தவராகவும் நடித்துள்ளனர். அவர்கள் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் வரும் பல காட்சிகள் பல இடங்களில் இருந்து சுடப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரன்பீர் கபூர் செய்யும் சில காமெடிகள் சார்லி சாப்ளின் படங்களில் இருந்தும், இலியானா வரும் ஒரு காட்சியும், பிரியங்காவும், ரன்பீரும் ஒரே படுக்கையில் இறந்து கிடக்கும் காட்சியும் ஹாலிவுட் படமான தி நோட்புக்கில் இருந்து சுடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இத்தனை காட்சிகளை பல்வேறு இடங்களில் இருந்து சுட்ட படத்தையா இந்தியா ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏழாம் அறிவு மற்றும் வழக்கு எண் உள்பட மொத்தம் 19 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கு செல்வதற்கான பரிந்துரை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இறுதியில் பர்ஃபி திரைப்படம் தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment