பாகன் வெற்றியில் படு உற்சாகமாக இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். இப்போது அடுத்த படத்துக்கான பணிகளில் மும்முரமாகியுள்ளார்.
அடுத்து அவர் நடிக்கும் படத்துக்கு நம்பியார் என்று தலைப்பிட்டுள்ளனர் (வேற யாராவது வச்சிருக்காங்களான்னு செக் பண்ணிக்கங்கப்பா... இல்லன்னா ரிலீசுக்கு முந்தின நாள் கேஸ் போடுவாங்க!).
இந்தப் படத்தை இயக்குபவர் புதுமுகம் கணேஷ். படத்தின் தலைப்புக்கும் பாத்திரங்களுக்கும் ரொம்பவே தொடர்புள்ளதாம்.
இதில் கதாநாயகன் ஸ்ரீகாந்த் பெயர் ராமச்சந்திரன். அவருக்கு எதிரியாக வரும் சந்தானத்தின் பெயர் நம்பியாராம். ஆனால் சந்தானம் வேடம் ஒரு கற்பனை பாத்திரமாக வருகிறதாம் படத்தில்.
நகைச்சுவை, காதல் கலந்து சுவாரஸ்யமான படமாக நம்பியார் இருக்கும் என்கிறார் ஸ்ரீகாந்த்.
இந்தப் படம் குறித்து நம்மிடம் ஸ்ரீகாந்த் பேசுகையில், "இதுவரை நான் கேட்காத புதிய பாணி கதை இது. நிச்சயம் இதை எங்கு வேண்டுமானாலும் சொல்ல முடியும். கேட்ட உடனே பிடித்துப் போய் ஒப்புக் கொண்டேன். என்னைவிட சந்தானத்துக்கு ரொம்ப பிடித்துவிட்டது. இந்தப் படத்துக்காக சில பெரிய படங்களைக் கூட அவர் தவிர்த்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்," என்றார் ஸ்ரீகாந்த்.
Post a Comment