சென்னை : ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் நடிகை அஸ்வினி. இவர் நடிகை பார்த்திபனுடன் பொண்டாட்டி தேவை என்ற திரைப்படத்தில் நடித்தார். ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் கதாநாயாகியாக நடித்திருக்கிறார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அஸ்வினி நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார். இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிறு அதிகாலை 3.15 மணிக்கு மரணம் அடைந்தார். உடனே அவரது உடல் ஆந்திர மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான நெல்லூருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தகனம் செய்யப்பட்டது.
Post a Comment