கமலிடம் பாராட்டு பெற்ற வவ்வால் பசங்க இசையமைப்பாளர் ஜெரோம் புஷ்பராஜ்

|

Kamal Appreciates Vavwal Pasanga Mu

சென்னை: வவ்வால் பசங்க பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல் அப்பட இயக்குனரை புகழ்ந்து பேசியுள்ளார்.

ஸ்ரீராஜி மூவிஸ் சார்பில் ஏ.கே.ஆர்.தயாரிக்கும் படம் வவ்வால் பசங்க. இதில் புதுமுகங்களாகிய ராகுல், உத்ரா உன்னி ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். சபரி, கம்பீரம் போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் இயக்குகிறார். படத்திற்கு இசை ஜெரோம் புஷ்பராஜ்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அதில் உலக நாயகன் கமல் ஹாசன் கலந்து கொண்டார். தற்போதுள்ள டிரெண்டுக்கேற்ப ஜெரோம் அருமையாக இசையமைத்துள்ளார் என்று கமல் பாராட்டியுள்ளார். கமல் ஹாசனும், ரஜினிரகாந்தும் தங்களை பாராட்ட மாட்டார்களா என்று பலர் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஜெரோமுக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.

ஜெரோம் ஏற்கனவே தொடக்கம் என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆனால் அப்படத்தில் அவரது திறமை பேசப்படவில்லை. தற்போது அவர் செங்காடு, மலர் மேல்நிலைப் பள்ளி மற்றும் தப்பு தாலங்கள் ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.

வாழ்த்துக்கள் ஜெரோம்...

 

Post a Comment