பிள்ளையார் சதுர்த்தியன்று புதுப்படத்துக்கு பூஜை போட்ட திருப்பதி பிக்சர்ஸ்

|

Prabhu Son S Second Movie Launches

இயக்குநர் லிங்குசாமியும் அவர் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸும் இணைந்து நடத்தும் திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்துக்கு இன்று பூஜை போட்டது.

இந்தப் படத்தை இயக்குபவர், எங்கேயும் எப்போதும் என்ற வெற்றிப்படம் தந்த சரவணன். அவருக்கு இது இரண்டாவது படம். முதல் படமான கும்கி விரைவில் வரவிருக்கிறது. அந்தப் படத்தைத் தயாரித்ததும் திருப்பதி பிக்சர்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்துக்கு சத்யா இசையமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்ய, ஆர்கே விஜயமுருகன் கலையை கவனிக்கிறார்.

படத்தின் பூஜை இன்று சென்னையில் எளிமையாக நடந்தது. நடிகர் பிரபு, இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

 

Post a Comment