ரன்பீர் கபூர், பிரியங்காசோப்ரா, இலியான நடித்துள்ள பர்ஃபி திரைப்படம் ஆஸ்கார் விருதுப் போட்டிக்கு தேர்வாகி உள்ளது. உள்ளது.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் காதலுடன் இருப்பவர்களை உருக வைத்துக்கொண்டிருக்கும் படம் பர்ஃபி. கேட்புத்திறனும், பேசும் திறனும் அற்ற கதாநாயகன், ஆட்டிஸம் பாதித்த கதாநாயகி இவர்களுக்கு இடையில் நுழையும் மற்றொரு பெண் என கதை மூவரைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் பெரும்பகுதி டார்ஜிலிங்கில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.
அனுராக் பாஸு இயக்கியுள்ள இந்த திரைப்படம், கடந்தவாரம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்திருக்கிறது. இந்த திரைப்படம்தான் இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.
இம்முறை தமிழிலிருந்து 7ம் அறிவு, வழக்கு எண், உட்பட மொத்தம் 19 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கு செல்வதற்கான பரிந்துரை போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இறுதியில் பர்ஃபி திரைப்படம் தேர்வானது. ஆஸ்கார் 2013 இன் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பட்டியலுக்கு பர்ஃபி தேர்வானதால், பிறநாட்டுப் படங்களுடன் போட்டியிடும். இதுவரை பல முறை இந்திய படங்கள் இப்பட்டியலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய படங்கள் மட்டுமே போட்டி பரிந்துரையில் இடம்பெற்றன. ஆனால் இதுவரை ஆஸ்கார் விருதை இந்திய திரைப்படம் ஒன்று கூட வென்றதில்லை.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள திரைப்படத்தின் இயக்குநர் அனுராக் பாஸூ, பர்ஃபி திரைப்படம் நிச்சயம் ஆஸ்கார் விருது வெல்லும் என்று கூறியுள்ளார். இதனிடையே பர்ஃபி திரைப்படம் டார்ஜிலிங்கில் படமாக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பிராண்ட் அம்பாஸிடராக தேர்வாகியுள்ளது. இதனையடுத்து உலகம் முழுவதும் மிகப்பெரிய மால்களிலும், முக்கிய நகரங்களிலும் இந்த திரைப்படம் வெளியிடப்படும் என்று டார்ஜிலிங் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
Post a Comment