மும்பை: பாகிஸ்தானிலிருந்து பாலிவுட்டுக்கு வரும் நடிகைகளின் அணிவகுப்பு பெரிதாக ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே வீணா மாலிக் இங்கு கவர்ச்சி அலையைப் பரப்புவதில் முன்னணியில் உள்ள நிலையில் அடுத்து மெஹரீன் சையத் என்ற மாடல் அழகியை பாலிவுட்டுக்குக் கொண்டு வருகிறார் இயக்குநர் சஞ்சய் புரன் சிங் செளஹான் என்பவர்.
இவர் லாகூர் என்ற படத்தை இயக்கியவர். அதிலேயே மெஹரீனை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தாராம். ஆனால் லண்டனில் நடந்த பேஷன் விழாவில் பங்கேற்று கேட்வாக் போனபோது சறுக்கி விழுந்து அடிபட்டு விட்டதாம் மெஹரீனுக்கு. இதனால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டதாம்.
தற்போது தனது அடுத்த படத்தை ஆரம்பிக்கும் சஞ்சய், இந்த முறை தவறாமல் மெஹரீனை புக் செய்து விட்டாராம்.
பாகிஸ்தானில் சூப்பர் மாடலாக வலம் வரும் மெஹரீன், இந்தப் படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம். இப்படம் இந்தியத் துணைக் கண்டத்தில் நிலவி வரும் அரசியல்சூழலை மையமாகக் கொண்ட காமெடிப் படமாகும் என்று கூறுகிறார் சஞ்சய்.
ஒரு பக்கம் காமெடிப் புயல், இன்னொரு பக்கம் கவர்ச்சிப் புயலா... பிரம்மாதம்!
Post a Comment