நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடந்தது இந்த நிகழ்ச்சி. ஹங்கேரி நாட்டு இசைக் கலைஞர்களை வரவழைத்து நேரடியாக கச்சேரி நடத்தி கலக்கினார் இளையராஜா.
மாலை 6.30 மணிக்குத் தொடங்கி 11 மணிக்குப் பிறகும் நீடித்த இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான் படைப்பாளிகள் பங்கேற்று, இளையராஜாவுடனான தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
படத்தின் எட்டுப் பாடல்களையும் லைவாக இசைத்து ரசிகர்களை மயக்கிவிட்டார் இளையராஜா. இதை நேரில் பார்க்க முடியாதவர்கள், தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக காத்திருந்தனர். ஒளிபரப்பு உரிமை ஜெயா டிவிக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாளை பிற்பகல் 2.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளி்பரப்பாகிறது என இயக்குநர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார். முன்னதாக 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, ஒரு மணிநேரம் முன்னதாகவே ஒளிபரப்பாக உள்ளது.
Post a Comment