வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவது நம் ஊர் இசை அமைப்பாளர்களுக்கு பிடித்தமான ஒன்று. ஏ.ஆர். ரஹ்மான் பல நாடுகளில் கான்செர்ட்டுகளை நடத்தியிருக்கிறார் அதேபோல தற்போது இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். டிசம்பர் 15ம் தேதி கோலாலம்பூரில் இசைக்கச்சேரி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு நம் ஊர் இசை அமைப்பாளர்கள் நடத்தும் கச்சேரிகளை கேட்பது என்றால் விருப்பம் அதிகம். இதனை கருத்தில் கொண்டு மலேசிய மண்ணில் இசைக்கச்சேரி நடத்துவதற்கு முடிவு செய்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. இந்த கச்சேரியில் இயக்குநரும் யுவனின் சகோதரருமான வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஆகியோர் பங்கேற்கின்றனர்.
யுவன் இசையமைத்த ‘ஆதிபகவன்' படத்தின் கேசட் வெளியீட்டு விழா கனடாவில் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு அடுத்த படியாக மலேசியாவில் Nasional Bukit Jalil Stadium தில் டிசம்பர் 15 ம் தேதி இரவு 7 மணிக்கு யுவனின் கச்சேரி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா ஏற்கனவே 2010 ம் ஆண்டு ஜனவரியில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்திய இசைக் கச்சேரியை 25ஆயிரம் ரசிகர்கள் வரை கேட்டு ரசித்தனர். அதேபோல் இந்த இசை நிகழ்ச்சிக்கும் பெரிதும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment