சபனா அஸ்மியின் சமூகசேவை நிறுவனத்திற்காக பாலிவுட் நட்சத்திரங்களுடன் இணைந்து பிரபுதேவா ராம்ப் வாக் செய்தார்.
மிஜ்வான் சாரிட்டி எனப்படும் சமூக சேவை நிறுவனத்தை பாலிவுட் நடிகையும், சமூக ஆர்வலருமான சபனா அஸ்மி நடத்தி வருகிறார். இது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் திரட்டப்படும் பணத்தைக் கொண்டு பல சேவைகளை செய்து வருகிறது.
இந்த சமூக சேவை நிறுவனம் திங்களன்று பாலிவுட் பிரபலங்களைக் கொண்டு ராம்ப் வாக் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் என்ஜிஓவில் உள்ள பெண்கள் தயாரித்த ஆடைகளை அணிந்து கொண்டு பாலிவுட் நட்சத்திரங்கள் வலம் வந்தனர்.
நம் ஊர் பிரபுதேவா இந்தியில் வாண்டட், ரவுடிரத்தோர் படத்தின் மூலம் பிரபல இயக்குநராக உருவெடுத்துள்ளார். அவரும் இந்த ராம்ப் வாக்கில் பங்கேற்று தீபிகா படுகோனே, கரண்ஜோகர், இம்ரான் கான் ஆகியோருடன் அழகாக நடந்து வந்தார்.
இது தொடர்பாக டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள பிரபுதேவா, ஏழை குழந்தைகளுக்காக என்னாலான சிறிய உதவியை செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ராம்ப் வாக்கில் பரினீதி சோப்ரா, மல்லிகா அரோரா, சமீரா ரெட்டி போன்ற பிரபலங்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment