ஆல் இன் ஆல் அலமேலு தொடரில் எமதர்மனையே வேலை வாங்கும் சுட்டிக்குழந்தையின் நடிப்பை பாராட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு அசத்தலாய் நடித்து பெயர் வாங்கியிருக்கும் குழந்தை நட்சத்திரம் யுவினா பார்த்தவி.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏவிஎம்மின் ''உறவுக்கு கைகொடுப்போம்'' சீரியலில் 50 வயது அம்மாவின் மறுபிறவிபோல மூன்று வயதேயான யுவினா பார்த்தவி நடித்து ரசிகர்களை அசரவைத்தார். அவளது நடிப்பை கண்டு, யுவினா சாதாரண குழந்தை இல்லை. இப்பொழுதே டைரக்டர் ஆர்டிஸ்டாக மாறிவிட்டாள் என்கிறார் அந்த தொடரை இயக்கிய இயக்குநர் புவனேஷ்.
இந்த குழந்தையை அறிமுகப்படுத்தின டைரக்டரா நான் பெருமைப் படறேன். அவள் வொண்டர்புல் சைல்ட் ஆர்டிஸ்ட். ஆல் இன் ஆல் அலமேலு வில் நளினியின் நடிப்புக்கே சவால் விடும் வகையில் நடித்து வருகிறாள் என்கிறார் புவனேஷ்.
டிவியில் யுவினாவை பார்த்தாலே சிலிக்கும் என்கிறார் அவரது அம்மா தேவி. ஷாப்பிங், பீச், சினிமா என்று எங்கே போனாலும் அவளை அடையாளம் கண்டு பாராட்டறாங்க. கூடவே என் கையை பிடித்துக் கொண்டு அருமையான குழந்தையைப் பெத்திருக்கீங்கன்னு பாராட்டுறாங்க அப்போது என் கண்கள் சந்தோசத்தில் கலங்க ஆரம்பித்துவிடும். ஆல் இன் ஆல் அலமேலுவில் யுவினா நளினிக்குப் பேத்தி ரோல் பண்றா. காரில் போகும்போதே இன்னிக்கு என்ன சீன எடுக்கப் போறாங்கன்னு ரொம்ப பெரிய மனுஷி போல கேட்டுக்குவா. அதுக்கப்புறம் ஒரு ஆர்டிச்டாவே மாறிடுவா என்று பெருமை பொங்க கூறினார் தேவி.
Post a Comment